preloader

அன்புடன் வரவேற்கின்றௌம்

உடபலாத பிரதேச சபை அதிகார எல்லைக்கு மேற்கில் கம்பொல நகரசபையின் அதிகார எல்லை மற்றும் உடுநுவர பிரதேச சபை அதிகார எல்லைகளினால்இ கிழக்கில் பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை அதிகார சபையினால் வடக்கில் கண்டி கடவத் சதர மற்றும் கங்கவடகோரலே பிரதேச சபை அதிகார எல்லையினால்இ தெற்கில் கொத்மலை பிரதேச சபை அதிகார எல்லையினால் எல்லைபடுத்தப்பட்டுள்ளது. வடக்கு நெட்டாங்கு 7.10 மற்றும் கிழக்கு அகலாங்கு 80.50 இற்கு இடையில் அமைந்துள்ள இவ் அதிகார எல்லை கடல் மட்டத்திலிருந்து 495 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது.

விசாலத்தில் சதுர கிலோ மீட்டர் 176.9 ஆன இக்கோட்டம் 61 கிராம சேவகர் பிரிவூகளை கொண்டுள்ளதோடு அது கம்பொல மற்றும் நாவலப்பிட்டி ஆகிய இரண்டு தேர்தல் தொகுதிகளிலும்இ உடபலாத மற்றும் தொலுவ ஆகிய இரண்டு பிரதேச செயலாளர் பிரிவூகளையூம் உள்ளடக்கி காணப்படுகிறது.

அத்துடன் இவ்வதிகார எல்லையின் மொத்த சனத்தொகை (2019 குடிசன மதிப்பீட்டிற்கமைய) 127717 ஆகும். அதில் பெரும்பான்மையானோர் சிங்களவர்களாகவூம்இ மேலும் தமிழ்இ முஸ்லிம்இ பறங்கியர் ஆகிய இனத்தவர்களும் காணப்படுகின்றனர்.


கௌரவ தலைவரின் செய்தி

உடபலாத பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள் குழு மற்றும் அலுவலக குழாமுடன் சேர்ந்து வேகமான அபிவிருத்தியின் ஊடாக மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக முடியூமான எல்லா வகையிலும் அர்ப்பணித்து செயற்படுவதோடு புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக அதன் நடவடிக்கைகளை மேலும் இலகுபடுத்தல் எனது நோக்கமாகும். அதன் ஒரு படிமுறையாக இந்த இணையத்தளம் ஆரம்பிக்கப்படுவதோடு சேவை வசதிகளை சேவை பெறுனர்களுக்கு கொண்டு செல்வதற்கும் அவை தொடர்பான தகவல்களை உலகத்திலுள்ள எந்தவொரு நபருடனும் பகிர்ந்து கொள்வதற்கும் இதன் ஊடாக சந்தர்ப்பம் கிடைக்கும்.

புதிய தொழில்நுட்பத்தின் வசதிகளை பெறுவதோடு பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் தங்களின் ஒத்துழைப்பை வழங்குவதற்கு எம்முடன் இணைந்து கொள்ளுமாறு கௌரவத்தோடு அழைக்கின்றேன்.

டி.ஜி. குணசேன
தலைவர் - மேல் மாகாணம் பிரதேச சபை

செயலாளரின் செய்தி

சேவை பெறுனர்களுக்கு வினைத்திறனான சேவையை பெற்றுக் கொடுப்பதற்காக புதிய தொழில்நுட்பத்தை பாவிக்கும் ஒரு படிமுறையாக நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையதத்ளத்தை ஆரம்பிப்பது எமது பாரிய வெற்றியாகும். எமது சேவை பெறுனர்களுக்கு தாமதமின்றி தேவையான சேவைகளை வழங்குவதோடு மாத்திரமல்லாமல் விரைவாக தகவல்களை பரிமாறறிக் கொள்வதற்கும் இதனூடாக சந்தர்ப்பம் கிடைக்கும். இப்பாரிய சந்தர்ப்பத்தின் அதிஉயர் சேவை வசதியை பெற்றுக்கொண்டு பிரதேசத்தின் அபிவிருத்திக்கு உங்களின் கடமையை மேற்கொள்வதற்கு பூரண அர்ப்பணிப்பை வழங்குமாறு பிரேரிக்கின்றேன்.

எஸ்.எம்.கே.ஜி.எஸ். சுபசிங்கே
செயலாளர் - மேல் மாகாணம் பிரதேச சபை

மத்திய மாகாண கௌரவ ஆளுநர் சட்டத்தரணி லலித் யு. திரு.கமகே அவர்களின் இரண்டாவது தவணைக்காக உடபலாத பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு 2021 டிசம்பர் 09 ஆம் திகதி பிரதேச சபை வளாகத்தில் நடைபெற்றது. அன்றைய தினம் உடபலாத பிரதேச சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தையும் கௌரவ ஆளுநர் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.